Monday, January 2, 2012

உரிமைக்கான மனிதப் போர்!


    இன்று, நாட்டில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் தன்மையை, மக்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பதுதான் எனது ஐயம்!

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டமாகட்டும், முல்லைப் பெரியார் அணைக்கான போராட்டமாகட்டும்,  ஊழலுக்கு எதிரான போராட்டமாகட்டும்,  தங்களுடைய ”போராட்டம்”  எத்தகைய விளைவை உண்டாக்கும், அதனால் என்னென்ன நன்மை, தீமைகள் விளையும் என்று யாருமே எண்ணிப் பார்ப்பதாகத் தோன்றவில்லை!


மக்களின் அறியாமை என்னவென்றால், தங்களுக்காக போராடுவதற்குத்தான் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதை மறந்து, தானே போராட களமிறங்குவதுதான். வேலைக்கு ஆள் வைத்த யாராவது, தானே வேலை செய்யப் புறப்படுவார்களா?  நாம், நமக்காக நியமித்த வேலைக்காரர்களே, அரசியல்வாதிகள்!  வேலைக்காரனுக்கே அடிமையாகிக் கிடக்கும் அவலம் இங்கே மட்டும்தான் அரங்கேறுகிறது!

தலைவனென்று ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, தலையையும் அவரிடத்தில் அடகு வைத்துவிட்டு, போராட களமிறங்கினால், ஆப்பசைத்த குரங்கின் நிலைதான் அனைத்து மக்களுக்கும்! ஆப்பை எடுத்துவிடலாம், ஆனால் வால் மாட்டிக் கொள்ளும்!

நாம் தேர்ந்தெடுத்த தலைவர்களின் திறமை, பதவியிலிருந்து அவர்களைத் திரும்பப் பெற , நமக்கு இருக்கும் அனைத்து வழிகளையும், நம் கண்ணில் இருந்து மறைத்து விடுவதுதான். அதற்கு அவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள் - பணம், தொண்டர்கள், தொண்டர்களுக்கும் மேலான குண்டர்கள்!


நமக்கேன் வம்பு என நாமும் அடங்கிவிடுகிறோம். நம்மைக் காக்க வேண்டிய காவல் துறையும் அவர்களின் வசம்.

அவர்களின் தயவு இல்லாமல் சொந்தக் குடும்பத்தைக் கூட காப்பாற்ற இயலாத நம்மால்,அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து, எப்படி சொந்த ஊரையோ, மாநிலத்தையோ,  நாட்டையோ  காப்பாற்ற இயலும்?

பல சமயங்களில், நமது போராட்டமே, நாம் தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு எதிரானதுதான் என்பது கொடுமையிலும் கொடுமை.

இலவசத்துக்க ஆசைப்பட்டு, தலையை அடகுவைத்த நாம் எத்துனை துன்பங்கள் வந்தாலும் அனுபவிக்க வேண்டியதுதான்.

நாம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

இதில் தற்கொலை செய்துகொள்ளும் புண்ணியவான்களின் தியாகம் இன்னும் அளப்பரியது. உயிரோடு இருந்து சாதிக்க முடியாததை, இறந்த பின் சாதிக்க முடியுமா என்ன?  உணர்ச்சிக்கும் ஓர் அளவில்லையா!

சாலைமறியல் செய்யும் மக்கள், சாதிப்பது தம்மைப் போன்ற சாதாரண மக்களை அலைக்கழிப்பது மட்டுமே! என்றாவது தம் துன்பத்துக்கு காரணமான அரசியல்வாதிகள் செல்லும் பாதையில், சாலை மறியல் செய்ய இயலுமா இவர்களால்!?





தன்வினை தன்னைச் சுடும்!   தனியாகப் போராடி சாதிக்க இயலாது! சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் களமிறக்காமல்!

வைத்திருக்கும் மிச்ச மீதியையும் இழப்பதற்கு முன்னால் விழித்துக் கொள்(ல்) மானிடா!











8 comments:

செல்வா said...

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

ஆப்பை அசைத்த குரங்கு என்கிற பழமொழி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதைப்பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது.

நீங்க போட்டிருக்கிற படம் அந்த பழமொழியை எனக்கு விளக்கியது.

அப்புறம் நாம் வைத்த வேலையாட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் நீக்கிவிடலாம். ஆனால் நாம் வைத்த வேலையாட்களே நம்மை அடிமைப்படுத்தும் நிலை வந்துவிட்டால் போராடித்தானே ஆகவேண்டியிருக்கிறது!

Anonymous said...

அருமை மச்சி. தொடர்ந்து எழுதவும்.

Siva said...

Wonderful wordings.. Nice creativity friend. . Keep writing. . :)

Pulavar Tharumi said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால், தவறு செய்யும் தலைவர்களுக்கு எதிராக நாம் போராடத்தான் வேண்டும். இல்லையேல் நம் நிலை தான் மோசமாகிவிடும் :)

Anonymous said...

முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சினைக்கு நிச்சயம் அரசியல் மட்டத்தில் மட்டும் தீர்வு காணமுடியாது இவ்வளவு பெரிய எழுச்சிக்கு மக்கள் நேரடியாக போராட்ட களத்தில் குதித்தது தான் முக்கிய காரணம் நண்பா. அரசியல் தலைவர்களின் கையில் அங்குசத்தை கொடுத்துவிட்டு நாம் அவர்கள் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் அடிமை யானையாக இருந்தால் நம்மை முட்டிப்போட வைத்து முதுகில் ஏறிக்கொல்(ள்)வார்கள். அதனால் நாமும் நம்முடைய பலத்தை கொஞ்சம் காட்டவேண்டும்
சமூகசிந்தனையுடன் எழுதுவது மிகவும் பாராட்டிற்குரியது நண்பா தொடர்ந்து எழுதுங்கள்.
gnani_ twitter

udanpirappe said...

pakkaa advice .. I like it

Gokul Prasad said...

உங்களை எப்படி தொடர்பு கொள்வது என தெரியாததால் இங்கே பகிர்கிறேன். மன்னிக்க

அப்படியா? சுதந்திரம் வாங்கி கொடுத்ததாக காந்தி ஒரு போதும் சொல்லவில்லை. நன் நாட்டில் ஆகஸ்ட் பதினைந்து அன்று சுதந்திரத்தை கொண்டாடதவர்கள் இருவர். ஒருவர் ஈ.வே.ரா. இன்னொருவர் காந்தி என்பது உங்களுக்கு தெரியுமா? நவகாளியில் ரத்த ஆறு ஓடிய போது வன்முறை கட்டுக்கடங்காமல் வெடித்த போது காந்தியால் மட்டுமே அதை தடுத்து நிறுத்த முடிந்தது. காந்தி ஒன்றும் ராணுவம் தேவை இல்லை என்றெண்ணும் மூடரல்ல. காந்தியம் ஒரு கனவு. அதை நோக்கி நகர வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க நம் பங்களிப்பு என்ன என்பதே எனது கேள்விக்கான தேடல். ஈழ போரில் வன்முறை உதவியதா? வன்முறையால் சுதந்திரத்தை ஒருபோதும் பெற்று தர முடியாது. பெற்றுத் தந்தாலும் இந்தியா போன்ற பன்மை நிரம்பிய தேசத்தில் அதனால் மேலும் கலகமே விளையும்

2nrc said...

nice..! இன்னும் நிறைய எழுதுங்கள்... நம் கையில் என்ன இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். நம் கையில் எல்லாமே இருக்கிறது...ஒற்றுமையை தவிர...!